மஹிந்தவுக்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிங்கள குர்ஆன் அன்பளிப்புமுன்னால் ஜனாதிபதியும், ஒருங்கிணைந்த எதிர் கட்சியின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக்ஷ MP க்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாம் பற்றிய நூல்களும், இஸ்லாம் பற்றிய மாற்றுமத நண்பர்களின் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோ தொகுப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னால் ஜனாதிபதியின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது அரசாங்கமும் அதற்குக் துணையாக இருந்து மவ்னம் காத்தமைதான் இனவாதிகள் அலுத்கமை கலவரத்தை உண்டாக்குவதற்க்கே காரனமாக அமைந்தது என்பது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளின் போது, முஸ்லிம்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வில்லை என்பதுடன் இது அனைத்து அரசுகளும் முஸ்லிம்களுக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும் என்பதும் முன்னால் ஜனதிபதியிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டதுடன், திருக்குர்ஆன் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் இனவாதிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் – SLTJ