நல்லாட்சி அரசாங்கம் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு சென்றுள்ளது
 இறக்காமம் மெளலானா மத்திய நிலையத்தில் நேற்று சனி 08 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட மக்கள் வளிகாட்டலும் சந்திப்பும் கலந்துரையடலுக்குமான பொதுக்கூட்டமானது மக்கள் விடுதலை முன்னணியியின் இறக்காமம பிரதேச அமைப்பாளர் எம்.எச்.ஏ முனாப் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது இன்நிகள்வில்  மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா மற்றும் முன்னாள் பாராளமண்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அமைப்பாளருமான எல்.ஜி.வசந் பியதிஸ்ச அவர்களும் கலந்து கொண்டமை குறுப்பிடத்தக்கது.

  மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா உரை நிகள்த்தயில்.
தற்போது நாடு எங்கயோ போய்க் கொண்டிருக்கின்றது 
முஸ்லீம் மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் எந்த  தீர்வும் இல்லை
 முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கவில்லை சுனாமியின் போதும் 
பேருவளை தம்புள்ள பள்ளி பிரச்சினையின் போதும் முஸ்லீம்களுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம் தாஜுதீன் கொலை வழக்கு மூடி மறைக்கப்படுகின்றது தற்போது அம்பாறை மாவட்ட மக்களுக்கு அரசில் வாதிகள் இருந்தும் எந்த ஒரு தீர்வும் பெறாமல் அனாதை ஆக்கப்பட்டுள்ளார்கள்
எங்கள் JVP கட்சியை ஆதரியுங்கள் எங்கள் கட்சிக்கு உங்கள் பலத்தை தாருங்கள்.
இன மத ஜாதி வேதம் பாராத ஒரே ஒரு கட்சி எங்கள்JVP கட்சிதான் ஏழை விவசாயிகளின் கஸ்டங்களை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள்  மக்களுக்கென்று அரசாங்கம்  ஒன்றை நாம் அமைப்போம் மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காகவே மக்கள் அல்ல  மக்களின் தீர்ப்பே எங்கள் தீர்ப்பு ஒன்றுபடுங்கள் உரிமைகளை வெல்வோம் என JVP ன் பிரதம செயலாளர் டில்வில் சில்வா தெரிவித்தார்.

எஸ்.எம்.சன்சீர் 
இறக்காமம் (விசேடசெய்தியாளர்)