வரம்பு மீறிய வார்த்தைகளால் சவூதி மன்னரை புகழ்ந்து எழுதிய பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை !சவுதியில் வெளியாகும் அரபு பத்திரிக்கை அல் ஜஸீரா. இதில் கட்டூரையாளராக பணியாற்றும் ரமதான் அல் இனன்ஷி என்பவர் சவுதி மன்னர் சல்மானை வரம்பு மீறிய வார்த்தைகளை கொண்டு புகழ்ந்தும், கடவுளின் பண்புகளுக்கு இணையாக வர்ணித்தும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடன் ஒப்பிட்டும் கட்டூரை ஒன்றை எழுதினார்.

இந்த வரம்பு மீறிய கட்டூரை வெளியானது மன்னரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து உடனடியாக அந்தக் கட்டூரையாளரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதுடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். கட்டூரையாளரின் இந்த வரம்பு மீறிய செயலுக்காக அல் ஜஸீரா பத்திரிக்கை மன்னிப்பு கேட்டுள்ளது.