மோடியின் ஊரில் களவாடப்பட்ட பள்ளி வாசல் நிலம்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்திய உத்திர பிரதேசம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணசியில் பாஜக வை சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திர சிங் மாத்து என்பவர் அன்குள்ள பள்ளி வாசலுக்கு  சொந்தமான நிலம் ஒன்றை கையகப்படுத்தியதோடு, அங்கு கட்டிடம் கட்டவும் முற்பட்டார்.

இதனை அறிந்த உள்ளூர் முஸ்லிம்கள் சிலர் அங்கு கூடி அங்கு கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே அங்கு இரு தரப்பிலிருந்தும் மக்கள் கூடினர். முஸ்லிம்கள் பள்ளி வாசல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது இரு தரப்பாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு அது மோதலாக மாறியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் தடியடி நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதற்கிடையே சுமார் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.