யாழ் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை செல்லும் போது கைதி தப்பியோட்டம்


வழக்கு ஒன்றுக்கு ஆஜர்செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் யாழ் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
திருட்டு சம்பவம் ஒன்று காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகப்பர் ஒருவரே இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
தப்பிச் சென்றவரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.