Home » » தொண்டர் ஆசிரயர் நியமனத்திற்கு பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர் வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை

தொண்டர் ஆசிரயர் நியமனத்திற்கு பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர் வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை

Written By Ceylon Muslim on Thursday, July 6, 2017 | 12:55:00 PM


FILE PIC


வடக்கு கிழக்கு  மாகா­ணங்களில்  தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­றா­த­வர்­களை தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­று­கின்­ற­னர் என்று போலி­யான உறு­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கிய பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறு­திப்­ப­டுத்­தி­ய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரை­வில் இந்த விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 தகு­தி­யற்ற தொண்­டர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கிய அதி­பர்­க­ளுக்­கும் அதனை உறு­திப்­ப­டுத்­திய வல­யக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர்­க­ளுக்­கும் எதி­ரா­க­ உரிய நடை­மு­றை­க­ளின் பிர­கா­ரம் திணைக்­கள ரீதி­யி­லான விசா­ரணை நடத்­தப்­ப­டவுள்ளது.

நிய­ம­னம் வழங்­க­லில் உள்ள விதி­மு­றை­க­ளில் தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் 2011 டிசெம்­பர் முத­லாம் திக­திக்கு முன்­பி­ருந்து தொடர்ச்­சி­யாகப் பணி­யாற்­றி­யி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னை­யுண்டு. ஆனால் பலர் 2011 ஆம் ஆண்­டி­லேயே உயர்­த­ரப் பரீட்­சைக்கு முதல் தட­வை­யா­க­வும் மேலும் சிலர் இரண்­டா­வது தட­வை­யா­க­வும் தோற்­றி­யுள்­ள­னர். அவ்­வா­றி­ருந்­தும் பாட­சா­லை­க­ளின் அதி­பர்­கள் உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கி­யுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத செயல் என்று குறிப்பிடப்பட்டள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment