Jul 21, 2017

தமது பிள்ளைகளை எந்தவித பக்குவமுமின்றி தான்றித்தனமாக வளர்க்கும் பெற்றோருக்கு சமர்ப்பணமாக
மனித பெற்றோர் உளவியலில் பாசம் என்பது ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. அதே போல்  பிள்ளைகளை வளர்க்கின்ற உளவியலில் சலுகைகள், இறுக்கங்கள், விட்டுக்கொடுப்புகள், பரிசோதனைகள், கருத்துப்பரிமாறல்கள், கட்டளைகள், கண்டிப்புகள், திட்டமிடல் மற்றும் வழிகாட்டல்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இதன் விளைவாக பிள்ளைகள் பக்குவப்படுத்தப்பட வேண்டும்.

 பக்குவம் என்பது இரண்டொரு வரிகளில் சொல்லி புரிய வைக்க முடியாது, எனும் உரிய நேரத்தில் உரியவிடயத்தை கையாழ்வதற்கான ஆன்மீக அறிவுசார் ஆற்றல் என சாதாரணமாக குறிப்பிடலாம்.

 எப்படி ஒரு பறவை தனது குஞ்சை பாசத்துடன் உணவூட்டியும் பின் உரிய நேரத்தில்  பயம் களைந்து பறப்பதற்காக கூட்டை விட்டு வெளியில்  தள்ளியும் பக்குவப்படுத்துமோ அப்படி.

இனிவிடயத்திற்கு வருவோம். இன்று பிள்ளைகளை வளர்க்கும் பணியில் இருக்கும் பெற்றோர்கள் பலர், ஐந்தறிவுள்ள பறவைகளை விட மோசமாக, பாசம் என்ற பெயரில் தத்தமது பிள்ளைகளை, தாமே சீரழித்துவிட்டு, பின்னர் பிள்ளைகள் சரி இல்லை என்று, தாமே ஒப்பாரி வைக்கிறார்கள். 

உண்மையில் பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. மேலும் தற்காலத்தில் அதீத கட்டுப்பாடு, அதீத சுயாதீனம், எல்லைப்படுத்தப்பட்ட சுயாதீனம் போன்ற பல்வேறு முறைகளில் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆனால் பக்குவப்படுத்தல் என்பது மிகச்சிறந்த பெற்றோரால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இது மேற் சொன்ன முறைகளை தாண்டிய  திட்டமிடல் கலந்து, இலக்கை புரிந்து, தடைகளை கடந்து, நேரத்தை உணர்ந்து, மனித விழுமியங்களை கோலோச்சுகின்ற ஆளுமை விருத்தி பற்றிய கோட்பாடுகள் இரண்டரக்கலந்தது. மேலும்  மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆறாவது அறிவு என்ன  என்பதை  புரியவைக்கப்படுவதற்கான நகர்வை கொண்டது. 

ஆனால் இன்று பலர் ஏனோ தானோ என்ற நிலையில்,  எல்லோரும் திருமணம் முடிக்கிறார்கள், எல்லோரும் பிள்ளைகள் பெறுகிறார்கள், எனவே நாங்களும் பெறுகிறோம் என்று செயல்படுவது போன்று இருக்கிறார்கள். இது ஒரு பாமரச்சிந்தனை. இந்த சிந்தனை உடைத்தெறியப்படல் வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் இலக்கு.

நேற்று ஓட்டமாவடியில் ஆட்டோவும் பஸ்சும் மோதி, அதில் படுகாயம் அடைந்த சகோதரர் ஒருவர், தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவது யாவரும் அறிந்ததே.  இறைவன் அவருக்கு பூரண சுகத்தை வழங்க பிரார்த்திப்போமாக ஆமின். 

அதே நேரம் இந்த சம்பவத்திற்கு பிரதாண காரணமாக சொல்லப்படும்,  மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் இன்றி, தாறுமாறாக குறுக்கே  பயணித்த நபர்களை, எப்படி விபரிப்பது என்றே புரியவில்லை.  

இஸ்லாமி பார்வையிலும் சரி இலங்கை சட்டத்திலும் சரி, தெளிவான வழிகாட்டல்கள் இருந்தும், வேண்டும் என்றே செய்யப்படும் பிழைகள், கிரிமினல் குற்றங்களை போன்றது . மேலும் இப்படியான செயல்களின் விளைவுகள், தற்கொலை செய்வது போன்றோ அல்லது இன்னுமொருவரை கொலை செய்வது போன்றோ, அமைய வாய்ப்புள்ளது.

உண்மையில் இவர்கள் போன்ற நிறையப் பேர், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.  அதற்கான அடையாளங்களாக சிலவற்றை  குறிப்பிடலாம். ஹெல்மட் அணிவதென்பது ஒரு வகை அலேர்ஜிக்,  குறைந்தது மூன்று பேர் சகிதம் வேகமாக உள் வீதிகளில் பயணிப்பது அதிலும் பின்னேர வகுப்புக்கும் களைந்தால் இன்னும் வேகம். பெருநாள் காலங்களில் சலுகையாக வழங்கிய போக்குவரத்து பொலிஸ் முன்னாலே எல்லா விதிகளையும் மீறி  ஒரு ஊதுகுழலால் பீப்பீ.  கடைசில் எங்கட ஊருன்னா நெருப்புடா ஒரு கலாய்ப்பு வேற.பொலிசின் மனநிலையோ இவன் என்ன மடையனாய் இருக்கான் என்பது ... இப்படி நிறைய.....

இதைவிட,

 காதில் ஹெட் செட், வாயில் சிகரெட், பையில் குளிசை, பேசில் காசி இப்படி சினிமா சாயல்களை, நிஜவாழ்க்கையாக கருதி  கற்பனை உலகில் ஒப்பனை இராஜாவாக தன்னை நினைத்து வாழ்வது.  இது என்ன வகையான பேத்தனம். மனித வாழ்வின் அடிப்படை என்னவென்றே புரியாமல், மனிதன் மிருகம் போல தனக்கான ஆறரிவை குறையறிவாக்கி வாழ்ந்து மடிகிறானே...   

இனி எப்படி எதிர்கால சந்ததி பற்றி கவலைப்படுவது. குற்றம் நிச்சயமாக ஒவ்வொரு பெற்றோரையும் சாரும். பாசம் என்பது பாலூட்ட போதும் ஆளுமை என்பது அறிவூட்டப்பட வேண்டும். கேட்பதெல்லாம் வழங்கள் என்பது விரும்புவதெல்லாம் செய்வதற்கான ஆணவத்தை வளர்க்கும். உரிய வயதில் உரிய விடயங்கள் செய்யப்பட அனுமதிப்பதும் பிஞ்சிலே முத்தாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

 கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை வழங்கி,   பிடிவாதம் தளர்த்தி,  விட்டுக்கொடுப்பை வலியுறுத்தி , கண்டிப்புடன் கருணையும் சமநிலை பேணி, வரவின் வலியை உணர்த்து, செலவின் பலனை அறிந்து ஒரு பக்குவப்பட்ட பிள்ளையாக வளர்க்கப்படல் வேண்டும். அல்லாத போது உங்கள் பிள்ளைகளை  நீங்களே வழிகெடுத்து விடும் மோட்டுத்தனமான பெற்றோர்களாகவே உருத்தெரிவீர்கள்.

இதையும் தாண்டி  பாடசாலை மாணவர்களுக்கு செல்போன், மோட்டார் பைக், செலவுக்கு காசி, போதாக்குறைக்கு தப்பை தண்டிக்கும் ஆசியரை ஒரு வழி பண்ணி, தமது அதீத பாசத்தைக்காட்டும் பெற்றோர் சினிமா  சாயலில் தமது பிள்ளைக்கு, ஒருவிடயம் குறைவதை மறந்துவிடுகின்றர். அதுதான் காதல். எனவே பிள்ளை இனம் மதம் கலாச்சாரங்களுக்கு அப்பால் கூட தனது தேவைக்காக செல்கிறது. எனவே பெற்றோர்களாக தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களின் இறுதி விளைவுடனான அடைவு என்ன?...........0000.......

#திருந்துமா_சமூகம்?

மஃரூப் முஹம்மது றிஸ்மி 
ஓட்டமாவடி
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post