நம்பிக்கையில்லாப் பிரேரணை! ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்குவார்கள் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நேரடியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக இருந்த போது கடந்த வருடம் கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.