மஹிந்தவுக்கு கபீர் ஹஷீம் சூளுரை


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதாக காலத்துக்கு காலம் கூறுவது தாங்கள் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை எனவும் முடியுமானால் அவர் அரசாங்கத்தை ஆட்டிக்காட்டவேண்டும் ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் சூளுரைத்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிடுள்ளார். மேலும் இது தொடர்பில் கூறியுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதாக காலத்துக்கு காலம் கூறுவது தாங்கள் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை அவருக்கும் ஏதாவது கூறி காலத்தை கடத்த வேண்டும் முடியுமானால் அவர் அரசாங்கத்தை ஆட்டிக்காட்டவேண்டும்.
முன்னர் ஒரு பேயாவுக்கு பின்னர் ஆட்சியை கவிழ்ப்பதாக கூறினார் பின்னர் இரண்டு போயா என்றார் இப்பொது வருட இறுதி என்கிறார். யானையை அவ்வளவு இலேசாக எவராலும் அசைக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .