வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம் றிசாத்  ஏ காதர்

ம்பாறை மாவட்டம் வட்டமடு பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

பிரதேச விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன பரிபாலனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு ஏ.ஆர்.என் முனசிங்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க மற்றும் திணைக்கள அதிகாரிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது, வட்டமடு விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததுடன்,  இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்வதுக்கான உறுதிமொழியினையும் வன பரிபாலன திணைக்கள தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர் ஹக்கீமுடன் மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யூ.எல். முபீன் மற்றும் மு.காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் இணைப்பாளர் ஏ.எல். மர்ஜூன் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.