ஹிந்து தேசியவாதம் உருவாக முன்னர் தமிழ்தேசியவாதிகளுடன் இணையுங்கள்நாட்டில் பௌத்த தேசியவாதம் அதிகரித்து தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் ஹிந்து தேசியவாதமும் உருவாகினால் முஸ்லிம்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படுவார்கள், நாட்டில் இருக்கும் ஹிந்துக்கள் எப்போதும் தங்களை ஹிந்து தேசியவாதிகள் என குறிப்பிடவில்லை அவர்கள் தமிழர்கள் என்றுதான் குறிப்பிடுகின்றனர் ஆனால் தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர் நாட்டில் முஸ்லிம்களும் தமிழ்தான் பேசுகின்றனர் முஸ்லிம்களும் தமிழர்கள்தான் ஆக தமிழ் தேசியவாதத்துடன் எப்போதும் கைகோர்த்து நிற்க வேண்டும் என சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்துள்ளார்.

சிலோன் முஸ்லிம் டிஜிடல் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி வழங்கிய அவர்,

இன்று ஹிந்து தேசியவாதிகள் பௌத்த தேசியவதிகளுடன் கைகோர்த்துள்ளனர், இது முஸ்லிம்கள் நோக்கியுள்ள பாரிய பிரச்சனை அன்று தொட்டு இன்று வரை முஸ்லிம் தேசியவாம் பேசும் அரசியல் கட்சிகளும் நபர்களும்  அந்த சொல்லின் ஆரம்பத்தை ஏனும் எட்டிப்பார்க்கவில்லை.

இது நீடித்தால் நமது இருப்பு பாரிய கேள்விக்குறியாகிவிடும் எனவும் குறிப்பிட்டடார் இதுகுறித்த நேர்காணலை இந்த லின்க்கின் மூலம் பார்க்கலாம்.