கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மீண்டும் பாரிய நீர்த் தட்டுப்பாடு



( ஐ. ஏ. காதிர் கான் )

நாட்டின் பல பாகங்களில் மீண்டும் வரட்சியான கால நிலை ஏற்பட்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீண்டும் பாரிய நீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு, பாரிய நீர் தட்டுப்பாடு நிலைமைக்கு, இப் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ளதாகவும், இப் பிரதேச நீர் நிலைகள் உள்ளிட்ட ஆறுகள், கிணறுகள் என்பன வற்றிப் போயுள்ளதாகவும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.       

மினுவாங்கொடை, மீரிகம, திவுலப்பிட்டிய, கம்பஹா, கிரிந்திவெல, அத்தனகல்ல உள்ளிட்ட இம்மாவட்டத்தின் மேலும்  பல்வேறு பிரதேச மக்கள், பாரிய நீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தித்திற்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான வண. சரத் இத்தமல்கொட  தெரிவித்துள்ளார்.

பவுசர்கள் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான சிறந்த மாற்று வழி ஒன்றையாவது, அரசாங்கம் தற்காலிகமாகவேனும்  மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.