சினிமாப்பட ஊடகம் நடாத்தும் முஸ்லிம் அமைச்சர்; முஸ்லிம் ஊடக பெயரில் வசூல்அபு றாசிட்

முஸ்லிம் ஊடகம் எனும் பெயரில் அரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சியொன்று இன்று முதல் தர  தமிழ் சினிமா சேனலாக இலங்கையில் மிளிர்ந்துள்ளது,  குறித்த தெலைக்காட்சி முஸ்லிம் அமைச்சருக்கு மறைமுகமாக சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது (ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும்)

தனக்கிருக்கும் அரசியல் போட்டிக்காக முஸ்லிம் சமூகத்தின் பெயரில் வசூல் செய்யப்பட்டு முஸ்லிம் சேனலை ஆரம்பிப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட பணத்தில் இன்று சினிமா சேனலை காற்றலையில் ஓடவிட்டுள்ளனர், தொலைக்காட்சி மாத்திரமல்ல தினசரி பேப்பர், வானாலி என்பவும் ஆரம்பிக்கப்படும் எனவும் கொழும்பு ஹோட்டலில் இடம்பெற்ற திறப்புவிழாவில் ஒப்புத் அளிக்கப்பட்டது, பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பேப்பர் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டது அதில் தொழில் புரிந்தவர்களின் வாழ்க்கைக்கே ஆப்பு வைத்தனர்.

வெள்ளவத்தையில் வனொலி என்று இணையத்தில் செய்து கொண்டிக்கின்றனர் முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் முழு முஸ்லிம் சமூகத்திற்கே கேடு!

மறிச்சுக்கட்டியில் காணிகளை இழந்து, மீளக்குடியேற முடியாமல் வடக்கில் தவித்து, புத்தளத்தில் அநாதைகளாகவும் விதவைகளாகவும் தவிப்பவர்களுக்கு தீர்வில்லை ஆனால் சினிமா ஊடகம் நடாத்த கோடிக்கணக்கில் பட்ஜட்.