அம்பாறையின் முஸ்லிம் கிராமங்களுக்குள் சிங்கள கடலை வியாபாரிகள்அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களுக்குள் சிங்கள கடலை வியாபாரிகள் உள்நுழைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட கிராமங்களுக்குள் மாத்தறை, மெனராகலை, போன்ற பிரதேசங்களை சேர்ந்த கடலை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட எமது பிராந்திய செய்தியாளர்கள், கிராமங்களி்ன் உள்வீதிகளுக்குள்ளும் இவர்களின் வியாபாரம் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு இந்த வியாபாரிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்ட எமது நிருபர்கள் குறிப்பிட்ட வியாபாரிகளின் தங்குமிடம் உள்ளிட்ட ஏனைய விடயங்களை கேட்டறிந்து கொள்ளுமாறும் கேட்டுள்ளனர்

( பிரசுரிக்கப்பட்டுள்ள படம் அட்டாளைச்சேனை உள்வீதியொன்றில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரின் பின்புறம்)