மு.மா.உ எஸ்.எம் சபீஸ் - அமைச்சர் ரிசாதுக்கிடையில் இரகசிய பேச்சுவார்த்தை?பிஹவ்ஸ்

அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குழுவிற்குமிடையில் இரகசிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலிக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியக்கிடைத்துள்ளது.

பிரதியமைச்சர் அமீர் அலியுடன் நெருங்கியவரான எஸ்.எம்.சபீஸ் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுடன் இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் முகம்கொடுப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இந்த தகவல் ஊர்ஜிதம் அற்றதாக இருந்தாலும் முன்னர் போல தேசிய காங்கிரஸ் தலைவருக்கும் சபீசுக்குமான தொடர்பு மந்த கதியெனவும் அறியக்கடைக்கிறது.