வரிப்பத்தான்சேனை அம்பாரை வீதியில் விபத்து

   இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட இறக்காமம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வரிப்பத்தான்சேனை கல்மடுவ பிரதேசத்தில் இன்று 2017.07.30 ம் திகதி மாலை 5.15 மணியளவில் மோட்டார் சைக்கிள் கனரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வரிப்பத்தான்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட ஹசன் சமீர் என்ற இளைஞன் படுகாயமடைந்து அம்பாரை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனம் அம்பாரை பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் அம்பாரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 ற.முகம்மது பாயிஸ்
 வரிப்பத்தான்சேனை செய்தியாளர்.