Jul 3, 2017

முஸ்லிம்களுக்கு ஆதரவு அளித்த தேரரை கொலை செய்ய பொதுபலசேனா முயற்சிஜாதிக பல­சே­னாவின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் பொது­ப­ல­சேனா அமைப்பின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்தும் தனக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

வட்­ட­ரக்க விஜித தேரர் ஜ-னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் செய்­துள்ள முறைப்­பா­டுகள் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் அறிக்­கை­யொன்­றினைப் பெற்றுக் கொண்டு ஒரு­வார காலத்தில் பாது­காப்­புக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­லாளர் ரஜித கொடி­து­வக்கு உறுதி வழங்­கி­யுள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தின் நியா­யங்­க­ளுக்­காக தான் குரல் கொடுப்­பதால் பொது­ப­ல­சேனா அமைப்பு தன்னை கொலை செய்ய முயற்­சிப்­ப­தா­கவும் எனவே தனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும்.

அத்­தோடு மஹி­யங்­கனை ஸ்ரீல.சு. கட்­சியின் அமைப்­ப­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நபர் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டவர் அவர் பொது­ப­ல­சே­னாவின் செயற்­பாட்­டா­ள­ரென்றும் அவரை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு கோரி­யுமே வட்­ட­ரக்க விஜித தேரர் பொலிஸ் மா அதிபர், ஜனா­தி­பதி ஆகி­யோ­ருக்கு முறை­யிட்­டி­ருந்தார்.

முறை­யிட்டு நீண்ட நாட்­க­ளா­கியும் நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே அவர் கடந்த புதன்­கி­ழமை ஜனா­தி­ப­தியை நேரில் சந்­திக்க ஜனாதிபதியின் செயலகத்துக்குச் சென்றிருந்தார். அச்சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என்று அமெ­ரிக்கத் தூது­வ­ரா­லயம் அபாய அறி­விப்பு விடுத்­துள்­ளமை முழுப் பொய்­யாகும். இது திட்­ட­மிட்ட சூழ்ச்­சி­யாகும்.

இலங்கை முஸ்­லிம்­களின் வீடு­க­ளையும் பள்­ளி­வா­சல்­க­ளையும் பாது­காப்புத் தரப்­பினர் சோத­னை­யி­டு­வ­தற்­கான முன்­னேற்­பா­டாகும். பொது­ப­ல­சேனா அமைப்பும் இதன் பின்­ணியில் செயற்­ப­டு­கி­றது என ஜாதிக பல­சேனா அமைப்பின் செய­லாளர் வட்­டரக் விஜித்த தேரர் தெரி­வித்தார்.

இலங்­கையின் ஐ.எஸ். தீவி­ர­வாதம் காலூன்­றி­யி­ருக்­கி­றது. அவர்கள் அமெ­ரிக்கத் தூது­வ­ரா­ல­யத்தை தாக்கத் திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என அமெ­ரிக்கத் தூது­வ­ரா­லயம்  அர­சாங்­கத்­துக்கு அறி­வித்­துள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;
இலங்­கையில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இருக்­கி­றார்கள் என்ற பொய் புர­ளியைக் கிளப்பி அமெ­ரிக்கா இலங்­கைக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வருகை தரும் முஸ்­லிம்­க­ளையும் இலங்­கை­யி­லி­ருந்து அரபு நாடு­க­ளுக்குச் செல்லும் முஸ்­லிம்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளாக்க சூழ்ச்சி செய்­துள்­ளது. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களைத் தேடு­கிறோம் என்ற போர்­வையில் பாது­காப்புத் தரப்­பினர் பள்­ளி­வா­சல்­க­ளையும் அரபு மத்­ர­ஸாக்­க­ளையும் தேடு­தல்­க­ளுக்­குட்­ப­டுத்தும் திட்­டமே இது­வாகும்.

அமெ­ரிக்கா, இஸ்ரேல் மற்றும் நோர்வே ஆகிய நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் இலங்கை முஸ்­லிம்­களைப் பல­வீ­னப்­ப­டுத்தும் நோக்கோடு பொது­ப­ல­சேனா பின்­ன­ணி­யி­லி­ருந்து செயற்­பட்டு வரு­கி­றது.

இலங்­கையில் ஏதும் அசம்­பா­வி­தங்கள் ஐ.எஸ். என்ற போர்வையில் நடந்தால் அதற்கு பொதுபலசேனா அமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளும் முஸ்லிம்களுக்கு எதிரானவையாகவே அமைந்துள்ளன என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post