அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் --

அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (31) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது, அம்பாறை மாவட்டங்களில் திணைக்களரீதியாக மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கிய நிதி தொடர்பாகவும் அதன் வேலைத்திட்டத்திட்டங்கள் தொடர்பாகவும், அம்பாறை மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை மேற்கொண்டனர்.

அந்தவகையில் நகரமயாமக்கல் திட்டத்தின் கீழ் அம்பாறை நகரை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு திட்டம் தொடர்பாகவும், தேசிய சிறுநீரக நோய் தடுப்பு திட்டம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பாகவும், சுற்றாடல் அபிவிருத்தி தொடர்பாகவும், மாவட்ட செயலகம் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல் தொடர்பாகவும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை பிராந்தியங்கள் ஊடாக மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், நீர் வழங்கல் நடைமுறை தொடர்பாகவும், பல்கலைக்கழகம் ஒன்றில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், அட்டாளைச்சேனை , இறக்காமம் போன்ற பிரதேசங்களில் யானை வேலி அமைப்பது தொடர்பாகாவும் இங்கு ஆராயப்பட்டது.

இதன் போது, அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், அனோமா கமகே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர்களான றொபின், எம்.ஐ. மன்சூர், சிரானி, திஸாநாயக்க, கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 சிலோன் முஸ்லிம் கிழக்குப்பிராந்திய காரியாலயத்திலிருந்து