ரவிக்கு பிணைமுறை ஆணைக்குழு அழைப்பு!வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்ச்சைக்குறிய பிணைமுறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க நாளை அழைக்கப்பட்டுள்ளார்.
பிணைமுறை தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற போது நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்க இருந்த நிலையில், அவர் பிணை முறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி முறைப்பாடொன்றை பதிவு செய்த அரச சட்டத்தரணி பேராசிரியர் அவந்தினி பெரேரா, எதிர்வரும் தினங்களில் ஆச்சர்யம் ஊட்டும் சாட்சி ஒருவர் பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து