இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை கொன்ற சிங்கம் # சிம்பாபேஹ்சிம்பாபேஹ்  நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிங்கங்கள் அதிகமாக வசிக்கின்றன. இங்குள்ள ஜிரெட்சி என்ற இடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் இரவில் இயற்கை உபாதை காரணமாக வெளியே வந்தார்.

அப்போது புதரில் மறைந்திருந்த சிங்கம் ஒன்று அந்த சிறுமியை இழுத்து சென்று விட்டது. அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த சிறுமி கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

பின்னர் காலையில் சென்று தேடிபார்த்த போது அங்கிருந்து 300 மீட்டர் தூரத்தில் சிறுமி பிணமாக கிடந்தார். அவளுடைய உடல் பாகங்கள் பலவற்றை சிங்கம் தின்றுவிட்டது. இந்த பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி மனிதர்களை தாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.