Jul 26, 2017

கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரிப்பு


கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­செல்­வதால் அதனை மீட்கும் போராட்­டத்தில் இணை­யு­மாறு முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமி­ழர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளன. இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.
நேற்­றைய தினம் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு பொய் ஆட்­சியும் அடா­வடி ஆட்­சியும் நடத்தும் இந்த அர­சாங்­கத்தின் அடா­வ­டித்­தனம் நாளுக்கு நாள் கூடிக்­கொண்டே போகின்­றது. இந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மூன்று சூட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. வடக்­கிலே இரு­வரும், மட்­டக்­க­ளப்பில் ஆற்று மணல் ஏற்­றிய ஒரு இளை­ஞனும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர். தமிழ்­மக்கள் வர­லாற்றில் ஒரு­க­றை­ப­டிந்த நாள் 1983 யூலை இன்­றைய தின­மாகும்.
அன்­றைய ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் தமிழ் மக்கள் மீது இனப்­ப­டு­கொ­லையை நடத்தி மூவா­யிரம் அப்­பாவி தமிழ்­மக்­களை படு­கொலை செய்த நாள் இது­வாகும்.
தற்­போ­தைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கமும் இதை மீண்டும் ஆரம்­பித்து விடுமோ என்ற அச்சம் வட­கி­ழக்கில் ஏற்­பட்­டுள்­ளது. நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட கொலை முயற்சி பாரிய சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. அர­சுக்கு வக்­கா­லத்து வாங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இதை கண்டும் காணாமல் இருந்து வரு­கின்­றது.
இன்­றைய நாள்தான் கடந்த 1983 ஆம் ஆண்டு பல இளை­ஞர்­களின் தலை­வி­தியை மாற்­றி­ய­மைத்த நாள். நானும் அதற்கு விதி விலக்­கல்ல. பல கற்­ப­னை­க­ளுடன் கல்­வியும் வீடும் என்­றி­ருந்த எங்­களை புத்­த­கங்­களை வீசி எறிந்து விட்டு அரச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஆயுதம் ஏந்­தச்­செய்த நாள்.
அன்­றி­ருந்த இளை­ஞர்கள் இயக்க வேறு­பா­டின்றி தமிழ் மக்­க­ளுக்கு ஆயுதப் போராட்­டம்தான் விடிவைத் தரும் என்று நம்பிப் புறப்­பட்­டார்கள்.பின்பு பல இழப்­புக்கள், சூழ்ச்­சிகள், தலைமைப் போட்­டிகள், சகோ­தரப் படு­கொ­லைகள் என்­றெல்லாம் எமது போராட்டம் சிக்­குண்டு முள்­ளி­வாய்க்­கா­லுடன் முடி­விற்கு வந்து நிற்­கின்­றது.
வேட்டி கேட்­டுப்போய் கோவ­ணமும் இல்­லாமல் வந்த கதை­யா­கவே தமி­ழர்­களின் தலை விதி மாறி­யுள்­ளது.  இன்றும் போட்­டியும் பொறா­மையும் பிர­தேச வாதமும் தமிழ் தல­மை­க­ளிடம் மாற­வில்லை. அதேபோல், கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கம் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. அத்­துடன், வடக்கில் தலைமைப் போட்­டிகள் என தமிழ் சமூகம் சிக்கித் தவிக்­கின்­றது.
இதிலிருந்து எமது சமூ­கத்தை விடு­விக்க வேண்­டு­மானால் பழ­மை­வாத சுய­நல அர­சி­யல்­வா­தி­களை தூக்கி எறிந்து விட்டு துணிச்சல் மிக்க புது­மை­யான அர­சியல் தல­மை­களை எமது இளைஞர் சமூகம் உரு­வாக்க வேண்டும்.
இன்னும் சம்­பந்தர், மாவை போன்ற சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பின்னால் சென்றால் எஞ்சி இருக்கும் எமது தமிழினத்தை நாம்  அக­ரா­தி­யில்தான் தேடிப் பார்க்க வேண்­டி­வரும்.
அவர்­களும் தீர்வை பெற்றுத் தருவோம் என்று கூறிக் கூறி இந்த காட்­டு­மி­ராண்டி அர­சுடன் துணை போய்க்­கொண்டு சுக­போ­கங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளார்கள். இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும்.
குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்து விட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும். இதற்­கான பாதையை நாம் வடி­வ­மைத்­துள்ளோம். தனி­யொரு மாற்று தமிழ் சக்­தி­யாக தனித்து போட்­டி­யி­ட­வுள்ளோம். இதில் வேறு­பா­டில்­லாமல் கிழக்கு வாழ் தமிழ் மக்களை எங்களின் பின்னால் அணிதிரளும்படி அன்பாக வேண்டிக்கோள்கின்றேன்.
இது வெறும் பதவிக்கோ புகழுக்கான போராட்டம் அல்ல தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்படி பணிவாக வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post