பலத்த பொலிஸ் பாதுகாப்பு யாழில் .


யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று (30) கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சுச் சம்பவத்தின் பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும், நேற்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவமும் ஆவா எனும் பெயரிலான குழுவின் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்