இராஜினாமா செய்யும் கட்டார் தூதுவர்


இலங்கையின் கட்டாருக்கான தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலகல் தொடர்பாக இன்றைய தினம் அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வெற்றிடமாக இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் பதவி தனக்கு வழங்கப்படும் என்று அவர் எதிர்பார்த்திருந்த போதும் அது முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அவர் தூதுவர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, லியனகே, கட்டாருக்கான தூதுவராக கடந்த மார்ச்சில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.