அதாஉல்லாவை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஊருக்கு ஏதாவது செய்யுங்கள் தவம்முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை அதிகம் விமர்சிக்கும் கிழக்கு மாகாண ச உறுப்பினர் ஏ.எல் தவம் அககரைப்பற்றுக்கு எதனைச் செய்திக்கிறார்? என்ற கேள்வி பாமரனுக்கும் எழும், அனைத்தையும் தடுக்கிறார் அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என அங்கலாய்க்கும் ஏ.எல் தவம் எதையும் மக்களுக்கு செய்யவில்லை அவர் செய்யத் தேவையும் இல்லை காரணம் அனைத்தையும் அதாஉல்லா செய்திருக்கிறார், ஒன்றிரண்டு வீதிகள் மிச்சம் இருக்கிறது அதனை அன்வர்டீன் செய்து கொண்டிருக்கிறார் என அல்ஹாஜ் ஹமீத் குறிப்பிட்டுள்ளார்,

பிரபல தொழிலதிபரும் அரசியல் விமர்சகருமான ஹமீத் கருத்து தெரிவிக்கையில் சேவல் கொக்கரிப்பது போல முட்டை விடாமல் கொக்கரிக்காமல் ஒரு முட்டையேனும் விட்டுவிட்டு கொக்கரித்தால் மிக நன்று, தவம் அதாஉல்லாவின் மூலம் அரசியல் முகவரி எடுத்தவர் அப்படியெனில் குருவிற்கு வழங்கும் குறைந்த பட்ட மரியாதையேனும் வழங்க வேண்டும், மாற்றானுக்கு தமது ஆதரவை வழங்காமல் ஊரானுக்கு வழங்குவது எவ்வளவு மேல். அக்கரைப்பற்று முழு அபிவிருத்தி கண்ட பிரதேசம் இதில் பூசி மினிக்கும் வேலையும் இல்லை இதுதான் அதாஉல்லாவின் சேவை.

தயதுவ செய்து வைத்த கல்லுக்கு முதலில் கட்டிடங்களை கட்டுங்கள், கட்சியை வளருங்கள், அதைவிடுத்து அதாஉல்லாவை வசைபாடாதீர்கள். நாங்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.