சதாம் நகர் பிரதான வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியம்திருகோணமலை, முள்ளிப் பொத்தானை,சதாம் நகர் பிரதான வீதி A-6 பிரதான வீதியோடு தொடர்பு உடைய முக்கியா வீதியாகும். A6 பிரதான வீதி தொடக்கம்  9ம் கொளணி பிரதான வீதியில் சேரும் வீதி, சதாம் நகர் பிரதான வீதி எனப்படும்.

இந்த வீதி 3 கிலோ மீட்டர் நீளமான நெடு வீதி அதிகமான பயணிகள் பயன் படுத்தும் வீதியாகும், இதனை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய மூன்று இனத்தவர்களும் மிக சிரமத்தின் மத்தியில் பயன் படுத்தி வருகின்றனார்.

இந்த வீதியின் குருக்கே புகையிரத பாதை செல்கின்றது . அந்த இடத்தில் புகையிரதப் பாதை உயர்ந்து காணப் படுவதனால் ஆட்டோ,டிமோ வட்டா,வேன்,கார்கள் போன்ற வாகனங்கள் பயணிக்க முடியாமல் பெரும் சிரமாக உள்ளது.

இந்த பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள்  அவசர சிகிச்சை பெற வேண்டிய நிலைகளில் இருதய அடைப்பு,கர்ப்பிணி தாய் மார்கள்  சுற்றி தூரப் பயணம் செய்ய வேண்டியநிலை ஏற்படுகின்றது.

தினந்தோதும் பாடசாலை சென்று வரும் சிறுவர்களும் மாணவர்களும் பொது மக்களும் மிக சிரமத்தின் மத்தியில் பயணித்து வருகின்றனர் .

இது தொடர்பாக  பலரிடமும் பேசியும் பயன் இல்லை.

இது தொடர்பாக  பொறுப்புக்குரிய அதிகாரிகள் கவணித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.

 எம்.றியால்தீன்
முள்ளிப்பொத்தானை