அனுமதியின்றி நடாத்தப்படுகிறதா அன்சார் மௌலவியின் பெண்கள் மத்ரசா?இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மற்றும் அதுசார்ந்த குழுக்கள் நடாத்தும் பெண்கள் முழுநர பகுதிநேர மத்ரசாக்கள் அனுமதியுடன் நடைபறுகிறதா? அல்லது அதுகுறித்து யார் பேசுவது இதனை கண்காணிப்பது யார் என முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணத்தில் அதிக பெண்கள் மத்ரசாக்களை நடாத்தும் அன்சார் (தப்லீகி)  மௌலவி உள்ளிட்ட பல தவ்ஹீத் கொள்கை சார்ந்தவர்களின் கல்லுாரிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதுகுறித்த பதிவு விபரங்களை வெளியிடுமாறும் குறித்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிரதியொன்று எமது செய்திப்பிரிவிற்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.