பருத்தித்துறை வல்லை பாலத்தின் கீழ் துப்பாக்கியின் பாகங்கள் கண்டுபிடிப்பு.பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம்  பருத்தித்துறை   பிரதான வீதியிலுள்ள அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்தில் உள்ளடங்கும்    வல்லை பாலத்தின் கீழ்  பல   துப்பாக்கி  பாகங்கள்    கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் கீழ் இறால் பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் நேற்றைய தினம்(17) அச்சுவேலி பொலிஸாருக்கு   வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக கடல் நீரேரியில் நீர்மட்டம் குறைவடைந்த நிலையில்  இதுவரை காலமும் நீருக்குள் புதையுண்டிருந்த நிலையில் துப்பாக்கியின் பாகங்கள் வெளியில் தென்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள்   கடல் நீரில் இருந்தமை காரணமாக  மிகவும் உருக்குலைந்த நிலையிலேயே  காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.