உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் விளாடிமிர் புதின்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

ஜெப் பெசோஸ், பில்கேட்சை விட ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தான் மிகப் பெரிய பணக்காரர் என அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தான் மிகப் பெரிய பணக்காரர் என அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.

ரஷிய ஜனாதிபதி புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க செனட் நீதித்துறை கமிட்டியில் இத்தகவலை அவர் தெரிவித்தார். 2000-ம் ஆண்டுகளில் ரஷியாவில் உள்ள பணக்காரர்களிடம் இருந்து இத்தொகையை புதின் பெற்று இருக்கலாம் என்றும் அவர் கூனார்.

ஆனால் இதை ரஷிய அதிபரின் கிரம்ளின் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.