Jul 31, 2017

இந்தியர்கள் இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள தடை



சிறுநீரக மோசடி இடம்பெறுகின்றமை காரணமாக இந்தியர்களுக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், மாலைதீவிற்கு இது ஏற்புடையதல்ல என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலைதீவு சுகாதார அமைச்சர் அப்துல் ஹபீம் இப்ராகிம்மை நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றன.

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post