இறக்காம வாங்காமம் பிரதேசத்தில் வைத்திய பாராமரிப்பு பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் அயராத முயற்சியில் இறக்காமம் பிரதேசத்திற்கு உட்பட்ட வாங்காமம் கிராம மக்களின் நலன்கருதி சுமார் 8.6 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீட்டில் அக்கிராமத்தில் வைத்திய பாராமரிப்பு பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (08/07/2017) இல்  இடம்பெற்றது.

இதன் போது  இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஐ.எம் மாஹிர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அலாவுத்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நட்டனர்.என்பதை படங்களில் காணலாம்.

எஸ்.எம்.சன்சீர்
இறக்காமம் (விசேட செய்தியாளர்)