ஜெருசலேமில் தொடரும் வன்முறை சம்பவங்கள்: நாளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

Jul 23, 20170 commentsஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது.

இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த டிசம்பர் மாதம் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அமெரிக்கா மட்டும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

சமீப காலமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. மேலும், ஜெருசலேம் நகரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

இதுகுறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என ஸ்வீடன், எகிப்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின்போது ஜெருசலேம் நாட்டில் நிலவிவரும் பதற்றத்தை தணிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
Share this article :