பாக். ஊடகம் வெளியிட்ட பொய்யான செய்திக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுசீனாவின் ஏவுகணை தாக்குதலில் 160 இந்திய வீரர்கள் பலியானதாக பொய்யான செய்தி வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையால் தற்போது பதற்ற நிலை நீடித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த டான் ஊடகம், சீனாவின் ஏவுகணை தாக்குதலில் 160 இந்திய வீரர்கள் பலியானதாக போலி செய்திகளை வெளியிட்டது. இதே செய்தியை துனியா மற்றும் டிரிப் நியூஸ் என்ற ஊடகங்களும் வெளியிட்டது.

போலிக் காட்சிகள் அடங்கிய வீடியோவை மேற்கண்ட ஊடகங்கள் ஒளிபரப்பியது. தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் உடல்களைக் கொண்டுசெல்வது போலவும் காயமடைந்தவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற போலியான புகைப்படங்களையும் வெளியிட்டன.

இதனையடுத்து, ''அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பாகிஸ்தான் மீடியாக்கள் பரவவிட்டு வருகின்றன” என மத்திய வெளியுறவு அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகங்களின் ஆதரமற்ற இத்தகைய செய்திகளுக்கு சீனா ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
”பாகிஸ்தான் ஊடகங்கள், வெளியீட்டு உள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது” சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய பத்திரிகையான குளோபல் டைம்ஸ், “பாகிஸ்தானிய ஊடக செய்திகள் நியாயமற்றது மற்றும் போலியானது" என்று கூறியுள்ளது.