“ஊருக்கு பொலிஸ்“ என்ற தொனிப் பொருளில் ஒரு மாதகாலத்துக்குச் சேவை!


சிலோன் முஸ்லிம் கிழக்கு செய்தி அலுவலகம்
படமும் தகவலும் - எஸ்.எம் சன்சீர் 

பொதுமக்களின் தேவைகளை இலகுபடுத்தி நிறைவேற்றிக்கொடுக்கும் நோக்கில் ”ஊருக்கு பொலிஸ்” என்ற தொனிப் பொருளின் கீழ் பொலிஸ் நடமாடும் சேவை இன்று தமனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்ரசிறி லெக்குதடல்ல அவர்களின்  தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்திட்க்கு உட்பட்ட மானிக்கமடு பல்தேவை நிலையத்தில் இடம்பெற்றது.

இன்நிகள்வில் அம்பாறைமாவட்ட உதவிப்பொலீஸ் அத்தியட்சகர் சூரிய ஆராட்சி ASP(1)  அவர்கள் கலந்துகொண்டு இதனை ஆரம்பித்துவைத்தார்.

இந்த நடமாடும் சேவைகள் யாவும் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னொடுக்கப்பட்டு வருகின்றது. இதில், பொலிஸ் சேவை, சுகாதார, சுதேச வைத்திய சேவை, பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் போன்ற திணைக்களங்களின் பல சேவைகள் இடம்பெற்று வருகின்றன. 

மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை மிக விரைவாக செய்துகொடுக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் தனது சேவைகைளை “ஊருக்கு பொலிஸ்“ என்ற தொனிப் பொருளில் ஆரம்பித்து முன்னொடுத்து வருகின்றது.

இந்த நடமாடும் சேவை நடாத்தப்படுகின்ற குறித்த பிரதேசத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சேவையை  ஒரு மாத காலத்துக்கு வழங்க முன்வந்துள்ளது.