இலங்கையை தாக்க ISIS பயங்கரவாதிகள் திட்டம்கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தில் விமானம் ஒன்றை கடத்தி சென்று இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க புலனாய்வு பிரிவு இது தொடர்பில் இலங்கைக்கு தகவல் வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இதற்காக ஆயத்தங்களை கொழும்பில் மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதானிகள் அங்கு செல்வதனை மட்டுப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.