அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி உடன்படிக்கையை கிழித்தெறிவோம்- JVPஅரசாங்கத்தைத் தோற்கடித்தாவது நேற்று செய்து கொள்ளப்பட்ட துறைமுக உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என அரசாங்கத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி  எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியாவது நாம் எமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த உடன்படிக்கையை நியாயப்படுத்த அரசாங்கம் என்ன கதை கூறினாலும் அவற்றில் எந்த பலனும் இல்லை. இலங்கைக்குரிய சொத்தும், வளங்களும் இந்நாட்டினதே ஆகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.