முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்கள் தேவை – SLTJ

இலங்கையில் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியராக அல்லது விதவைகளாக இருந்தாலும் திருமணத்திற்கு அவர்களின் சம்மதம் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ தெரிவித்துள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன் வைக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ சார்பில் முன் வைத்துள்ள பரிந்துரைகளில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்ணின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது உறுதியாக குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் நடைபெற்றால் அதனை செல்லுபடியற்றதாக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும்.” என்றும் ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ தமது யோசனைகளில் வலியுறுத்தியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.