ரயில்வே ஊழியர்கள் திடீரென 1 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று இன்று (12) காலை 10.00 மணி முதல் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் கோட்டை ரயில் நிலையத்துக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையிலான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயிவே கட்டுப்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வீடுகளில் பரவியுள்ள பூச்சி வகையை  மட்டுப்படுத்த இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையை முன்னிருத்தியே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இன்று முற்பகல் 11.00 மணிக்கு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.