கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்


கடுவெல ரங்கடு மகா பத்தினி தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா இன்று (27) நடைபெறவுள்ளதனால் கொழும்பு – ஹங்வெல்ல பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 10.00 மணி முதல்  பிற்பகல் 2.00 மணி வரையில் இப்பாதையின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது.
இந்தப் பெரஹரா நடைபெறும் காலப் பகுதியில் ஹங்வெல்ல- கொழும்பு பிரதான வீதி கடுவலை வரை மூடப்படவுள்ளது. இதன்போது பயன்படுத்துவதற்கான மாற்று வீதிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஹங்வெல்லயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் நவகமுவ சுமனதிஸ்ஸ பாதைவழியாக வந்துரமுல்ல, அத்துருகிரிய பாதை ஊடாக கொழும்புக்கு பயணிக்கலாம்.
அத்துடன், கடுவெலயிலிருந்து – ஹங்வெல்ல நோக்கிச் செல்பவர்கள் கடுவெலயிலிருந்து பியமக, மல்வானை பாதைவழியாக ஹங்வெல்லவுக்க பயணிக்கலாம் எனவும் பொலிஸார் வழிகாட்டியுள்ளனர்.