நீதிபதிகளின் எண்ணிக்கை 10 பேரினால் அதிகரிக்க அங்கீகாரம் மேல் நீதிமன்றம்

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் 10 பேரினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 75 பேராக காணப்படும் நீதிபதிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.