ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பேரை சிறையடைக்க முயற்சி - விமல் வீரவன்சபுதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பேரை சிறையடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

நேற்று (27) கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். 

அரசாங்கத்தின் அமைச்சர்களின் வழக்குகளை பின்தள்ளுவதற்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துவதற்குமாகவே அவர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்தவகையில் எதிர்வரும் உள்ளுாட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியைச் சார்ந்த 10 பேரை சிறையில் தள்ளுவதற்கு முயற்சிகள் புதிய நீதியமைச்சர் வசம் பொறுப்பாக கையளிக்கப்பட்டுள்ளன என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.