11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது.  
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.  
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க வேண்டுமென்று, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருதரப்பினர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.  
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஆட்சிபீடமேறினால் தாமும் ஆதரவை நல்குவோம் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிலையிலேயே, மேற்கண்ட தகவல் கசிந்துள்ளது.