12 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்ட விமான நிலையத்தில் மீட்பு


சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.35 மணியளவில் டுபாய்க்கு கடத்த தயாராகவிருந்த வல்லப்பட்டைகளே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 116 கிலோ கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 12 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.