அனுராதபுர மாவட்டத்தில்127 பேர் இவ்வருடத்தில் சிறுநீரக நோயினால் மரணம்


இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான காலப் பகுதியில் சிறுநீரக நோயினால் அனுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வட மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த வருடத்தில் (2016) சிறுநீரக நோயினால் 296 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த (2017) ஜனவரி மாதம் முதல் ஏப்றல் மாதம் வரையில் அனுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 13451 பேர் சிறுநீரக நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தவர்களே இவ்வாறு கணிப்பில் எடுக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் உயிரிழந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படாதுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.