எதிர்வரும் 15ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்.!

(க.கமலநாதன்)
அரச நிர்வாக சேவையாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக கூறிய அரசாங்கம் மௌனம் சாதித்து வருகின்றது. எனவே 15 ஆம் திகதியன்று அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்போம் தீர்வு கிட்டாவிடின் தொடர்சியாக வேலை நிறுத்தத்தை அறிவிப்போம் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலளார் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
கொழும்பு மருதானை சன சமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேய அவர் மேற்கணட்வாறு தெரிவித்துள்ளார்.