டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு 2,000 பேர் பணியில்

வேகமாக பரவி வரும் டெங்கு நோயை குறைப்பதற்காக விசேட ஏற்பாடொன்றை முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினருக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதற்காக டெங்கு ஒழிப்பு அதிகாரிகள், முப்படை வீரர்கள் அடங்கிய 2000 பேர் கொண்ட குழு ஒன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருனாகலை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் கூடிய அளவில் அவதானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த வருடம் நிறைவடைந்துள்ள காலப்பகுதிக்குள் 15,605 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 327 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.