ஞானசார தேரரின் வழக்கு டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு


வெலிக்கட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் சேவைக்கு தடங்கள் ஏற்படுத்தியதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று (25) கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.