இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கான பண்ட வரி 25 சதம் வரை குறைப்பு


இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராமுக்கான விசேட பண்ட வரி 5 ரூபாவிலிருந்து 25 சதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட வரி குறைப்பு செப்டம்பர் மதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் காணப்படும்.
நிதி அமைச்சின் வாழ்க்கை செலவு தொடர்பான குழு இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை, கோதுமை விதைக்கான இறக்குமதி வரி 9 ரூபாவில் இருந்து 6 ரூபாவாவும், கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி 25 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.