இலஞ்சமாக 25,000 பெற்ற அதிபருக்கு 8 வருட சிறை


முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் போது 25,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அதிபர் ஒருவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் போது கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிபருக்கு 8 வருடங்கள் சிறைத்தண்டனையுடன் 25000 ரூபா தண்டப்பணம் கட்டுமாறும் உத்தரவிட்ட நீதிபதி குறித்த தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக இன்னுமொரு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த 2009ம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர் அனுமதிக்காக 2008 நவம்பர் 16ம் திகதி குறித்த அதிபர் மூலம் 25,000 ரூபா இலஞ்சமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.