Aug 1, 2017

26 கோடி ரூபா காணியை, போலி உறுதி ஊடாக 5 கோடிக்கு விற்க முயற்சி

பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் தமிழ் வர்த்­தகர் ஒரு­வரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி  காணி உறுதிப் பத்­திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்­பனை செய்ய முயன்ற திட்­ட­மிட்ட கும்பல் ஒ ஒன்­றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். அந்த திட்­ட­மிட்ட கும்­ப­லி­ட­மி­ருந்து மேலும் நூற்றுக் கணக்­கான ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கைய மோசடி நட­வ­டிக்­கைகள் ஏதும் இந்த கும்­பலால் அந்த ஆவ­ணங்­களை பயன்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த சம்­பவம் தொடர்பில்  கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்­கவின் கட்­டுப்­பாட்டில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஹான் பிரே­ம­ரத்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய  மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பம்­ப­ல­பிட்டி பகு­தியைச் சேர்ந்த வர்த்­த­க­ரான இரா­ம­நாதன் கம­ல­நாதன் என்­பவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் கடந்­த­வாரம் முறைப்­பாடு ஒன்­றினைச் செய்­துள்ளார். தனது  காணியை  தனக்கு தெரி­யாமல் போலி ஆவணம் ஊடாக விர்­பனைச் செய்ய முயற்­சிகள் நடப்­ப­தாக அவர் கொடுத்த முறைப்­பாட்­டுக்கு அமைய கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ளரின் ஆலோ­ச­னைக்கு அமைய அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அஞ்­ஜலோ பெரேரா, உப பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான  கஸ்­தூரி கங்கா, நிஷாந்த, சந்­தி­ர­சிறி, பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான சிசிர (88680), ருவன் (79162) உள்­ளிட்­டோரைக் கொண்ட குழு­வினர்  விசேட விசா­ர­ணை­களை நடாத்­தி­யுள்­ளனர்.

குறித்த காணியை போலி உறுதி ஊடாக விற்­பனை செய்யும் முயற்­சிகள் இடம்­பெ­று­வதை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள பொலிஸார், விற்­பனை தொடர்பில் ஆரம்ப கட்ட பணப் பறி­மாற்றல் பொர­லஸ்­க­முவ பகு­தியில் ஹோட்டல் ஒன்றில் நடப்­பதை அறிந்து அங்கு சென்ற பொலிஸார் சந்­தேக நபர்கள் இரு­வரை கைது செய்­தனர்.

இந்த விற்­பனை நட­வ­டிக்­கையில் பணம் பறி­மாற்­றல்­க­ளுக்கு வந்­தி­ருந்த பிர­தான சந்­தேக நபர்­களில்  பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இதன் போது காரில் இருந்து நூற்­றுக்­க­ணக்­கான ஆவ­ணங்­களை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். அட்­டோனி பத்­தி­ரங்கள், காணி உறு­திப்­பத்­தி­ரங்கள்;,  மற்றும்  ஏரா­ள­மான  ஆவ­ணங்கள் அதில் இருந்­துள்­ளன. இந்த ஆவ­ணங்கள் உன்­மை­யா­னதா போலி­யா­னதா என்­பதைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணைகள் தற்­போதும் தொடர்­கின்­றன. 

முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் இந்த போலி ஆவ­ணங்­களை காணி பதிவுத் திணைக்­க­ளத்தில்  பதி­விடும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக  நம்­பப்­படும் சந்­தேக நபரை பொலிஸார் அடை­யாளம் கண்­டனர். இத­னை­ய­டுத்து ..................... எனும்  சந்­தேக நப­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.அத­னை­ய­டுத்து  செய்­யப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் கட்­டு­கஸ்­தோட்டை ................... என்­பவர் ஊடா­கவே இந்த போலி ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­மையை பொலிஸார் கண்­ட­றிந்­தனர். 

கட்­டு­கஸ்­தோட்டை ......................... மீது கண் வைத்த பொலிஸார், போலி காணி உறுதி தொடர்­பிலும் பிரத்­தி­யேக விசா­ர­ணையை நடாத்­தினர். இதன் போது இரா­ம­நாதன் கம­ல­நாதன் எனும் வர்த்­த­க­ருக்கும் அவ­ரது மனை­விக்கும்  சொந்­த­மான காணி,  வேறு இரு­வ­ருக்கும் விற்­கப்­பட்டு, அவ்­வி­ருவர் ஊடாக மற்­றொ­ரு­வ­ருக்கு விற்­பனைச் செய்­யப்­ப­டு­வதைப் போல்  ஆவணம் தயார் செய்­யப்­பட்­டி­ருந்தை பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

வவு­னியா, யாழ் பகு­தியைச் சேர்ந்த குறித்த இரு­வ­ரையும் முதலில் கைது செய்த பொலிஸார் அவர்­களை ஏனைய சந்­தேக நப­ரையும் கைது செய்­தனர்.  இதன் போது போலி உறு­தி­களை அச்­சிட பயன்­ப­டுத்­தப்­பட்ட அச்சு இயந்­திரம், ஸ்கேனர், முத்­தி­ரைகள், காணி உறு­திகள் அச்­சி­டப்­ப­யன்­ப­டுத்­தப்­படும் தாள்கள் உள்­ளிட்­ட­வற்­ரையும் பொலிஸார் கைப்பற்றினர்.

மொத்தமாக இதுவரை 8 சந்தேக நபர்கள் கொழும்பு மோசடி தடுத்துப் பிரிவினரால் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில் அவர்களில் ஐவர் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்  செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network