Aug 24, 2017

27ஆம் திகதி மு.காவால் அபிவிருத்தி பெருவிழா காணும் அட்டாளைச்சேனை


அட்டாளைச்சேனையின் அபிவிருத்தி பெருவிழா  எதிர்வரும்  2017.08.27 காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி பாதையில் மற்றுமோர் நிகழ்வு அட்டாளைச்சேனையில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இந்நிகழ்வுகளில் நமது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் அழைப்பினை ஏற்று நமது கட்சியின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான கௌரவ : ரவூப் ஹக்கீம் (பா.உ), அவர்களும் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரட்ண (பா.உ) அவர்களும், கிழக்கு மாகாண ஆளுனர் கெறவ : ரோஹித போகல்லாவ அவர்களும், கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ இஸட். ஏ. நசீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களும், சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைஷால் காஸிம் (பா.உ) ஆகியரோடு, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பின்வரும் அபிவிருத்தி பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளனர். 

இந்நிகழ்வில்; 
• அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் விடுதியும், அவசர விபத்துப் பிரிவு, கேற்வேய் என்பவற்றிற்கான அடிக்கல் நடல்.
• சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஆனைறகைந விடுதிக்கான அடிக்கல் நடல்.
• கால்நடை வைத்திய அதிகாரி காரியாலமும் சுற்று மதிலும் திறந்து வைத்தல்.
• ஷரீப் ஹாஜியார் வீதியினை 'காபட்' இடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு
• அஸ்ரப் ஞாபகார்த்த பொதுவிளையாட்டு மைதான அபிவிருத்தி அங்குரார்ப்பனம்.
• கப்பலடி வீதிக்கு 'காபட்' இடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு.
• அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியாசாலையில் வைத்திய அதிகாரிகள் விடுதி திறந்து வைப்பு.
• ஆலம்குள பிரதேச அபிவிருத்தி
• பல் தேவைக் கட்டிடம் திறந்து வைத்தல்.
• ஆரம்ப மருத்துவ பாராமரிப்பு பிரிவு திறந்து வைத்தல்.
அமைச்சர் நஸீரின் சேவைகள் அடங்கிய “பதிவு” நூலும் வெளியிடப்படவுள்ளது. 
எனவே கட்சியின் அபிவிருத்திப் பெருவிழாவில் கலந்துகொள்வதோடு அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணிக்கு சந்தை சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network